Description
பெரியார் என்று விதந்தோதப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கருத்துகள் அனைத்தும் எவ்விதப் பாகுபாடும் இன்றி மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்படுவதில்லை. அவர் சொன்னவற்றில் தங்களுக்கு ஏற்ற கருத்துகளை மட்டும் சொல்லி, தங்களுக்கு வசதியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் பெரியாரியர்கள் ஈடுபடுகிறார்கள். அதில் கணிசமான வெற்றியும் பெற்று விடுகிறார்கள்.
ம.வெங்கடேசன் அம்பேத்கரிய ஆய்வாளர். ஈவெரா சொன்னவற்றில் மக்கள் முன்பாக எவையெல்லாம் மறைக்கப்படுகின்றனவோ அவற்றை இப்புத்தகத்தில் தொகுத்திருக்கிறார். இன்று தங்கள் அரசியல் காரணங்களுக்காக ஈவெராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டிப் பிரசாரம் செய்பவர்களுக்கு மத்தியில், துணிச்சலாக. மறைக்கப்படும் ஈவெராவின் கருத்துகளை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டி இருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள், ‘இப்படியெல்லாம் கூட பெரியார் சொல்லி இருக்கிறாரா?’ என்று ஆச்சரியப்படப் போவது உறுதி.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.