Description
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் தலைவரான அறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ்’ நாளிதழின் அங்கமான ‘தமிழ் – திசை பதிப்பகம்’ வெளியிடும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் அட்டை வெளியானது. தமிழ்நாட்டுக்கு ஜனநாயக அரசியலைக் கற்பித்த முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளையும், அவரது வரலாற்றையும் பேசும் இந்நூலை உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவான இந்தியத் தேர்தல் சமயத்தில் வெளிக்கொண்டுவருவது சாலப் பொருத்தமானது. ஏனென்றால், ஒரு சாமானியனாலும் அரசியல் கட்சி தொடங்க முடியும்; ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று முன்னுதாரணத்தைத் தமிழ்நாட்டின் வழி சுதந்திர இந்தியாவில் உருவாக்கியவர் அண்ணாதான்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.