Description
நான்கு கதைகள் கொண்ட இப்புத்தகத்தில் முதலாவதாக வருவது மங்கலதேவி.பாண்டிய மன்னன் தன் எல்லைகளை விரிவுபடுத்த தடையாக இருக்கும் கொங்குநாட்டின் கோட்டையை அழிக்கத் தன் படைவீரனான ரகுவீரனை அனுப்பிவைக்கிறான்.கோட்டையில் இருக்கும் வீரர்களை வெளியே வர வைத்தால் மட்டுமே வெற்றி என்பதில் தெளிவான பாண்டிய அரசன் அக்கோட்டையைக் காவல் காக்கும் மங்கலதேவியிடம் ரகுவீரனை அனுப்பி வெற்றியை தன் வசமாக்கி கொள்கிறார்.
இரண்டாவது கதையான பழிவாங்கும் விழிகள் அந்தணன் ஒருவனை வீரனாகி தன்னைப்
பரிகசித்த பல்லவ மகளையே மணந்ததை சொல்கிறது.
காதலுக்கு ஜாதிகள் தடையில்லை என்பதை முஸ்லீம் பெண்ணை மணந்த அந்தண வீரனை பற்றி சொல்வது மூன்றாவது கதையான மஸ்தானி.
உலகை சுற்றி பார்க்க ஆசைப்பட்ட இளவரசன் நற்கிள்ளி தன்னைக் கோழையாகக் காட்டி மன்னனே நாடுகடத்த தூண்டி ஒராண்டுக்கு பிறகு தன் வீரத்தை காட்டி மணந்த நக்கண்ணையுடன் தந்தையைச் சந்திக்க வந்ததை சொல்வது தான் நான்காவது கதை கோழைச் சோழன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.