Description
இது எப்படியிருந்தபோதிலும் ஏற்கனவே இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு நாளும் நான் வாழ்கிறேன். நான் இறந்து போனால் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்தப் புத்தகம் அச்சாகி வெளிவரும் வரையிலும் நான் உயிரோடிருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதற்குள் நான் இறந்துபோனால், நான் சொல்வது நடக்கப் போகிறதா, இல்லையா என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்: ‘வெறுப்புணர்வின்’ அடையாளமாக என்னைத் தன் பத்திரிகைகளில் வெள்ளையன் காட்டப்போகிறான்.
நான் உயிரோடிருந்தபோது என்னை அவன் பயன்படுத்திக் கொண்டது போலவே, என்னுடைய மரணத்தையும் அவன் பயன்படுத்திக்கொள்வான். என்னுடைய இனத்திற்கு எதிராக அவனுடைய இனம் புரிந்த, சொல்லின் வர்ணிக்க முடியாத குற்றங்களின் வரலாற்றை எடுத்துக்காட்டினேன்; அதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியை உயர்த்திப் பிடித்தேன் என்ற உண்மையிலிருந்து தப்பித்து ஒட இது அவனுக்கு உதவும்.”
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.