Description
”நீங்கள் மலர்களுக்குப் பின் எழுதுவதே இல்லையே? எழுதுவதை விட்டு விட்டீர்களா?” என்ற வினா, என்னிடம் எழுப்பப்பெறும்போது எனக்கு இப்போது அது எதிர்பாராக் கேள்வியாக இருப்பதில்லை. ஓர் எழுத்தாளர், மக்களிடையே செல்வாக்கையும் புகழையும் பெறும்படியான பல படைப்புக்களை நாவல் வடிவில் வைத்திருக்கலாம். எனினும், முதலில் அவரை உலகுக்கு உணர்த்தும் பேரலை போல் ஒரு படைப்பு, பரிசு, பத்திரிகை வாயிலான, ‘பிரபல்யம்’ என்ற சிறப்புக்களைப் பெற்றுத் தரும்போது, அப்படைப்பு வாசகர் மனங்களில் நீங்கா இடம் பெறும் முக்கியத்துவம் ஏற்படுகிறது. ’மலர்கள்’ 1956-ம் ஆண்டில் என்னால் எழுதப்பெற்று, 1958-இல், ‘ஆனந்த விகடன்’ நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெறும் சிறப்பையும் பெற்றது. முன்னும் பின்னும் இருந்திராத வகையில் அந்த வெகுஜனப் பத்திரிகையின் தொடர்பு, இந்த நாவலின் வாயிலாக எனக்கு மக்களிடையே செல்வாக்கைப் பெற்றுத்தர வாய்ப்பாக இருந்தது.
– ராஜம் கிருஷ்ணன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.