Description
மாயத்தச்சன் ந. பிச்சமூர்த்தியின் நெடுங் கவிதையான வழித்துணையைப் பற்றிய ஆய்வுநூல். இந்நெடுங்கவிதை, பல கோணங்களிலிருந்து, தொனி, ரசனை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கவிதைக்கு மட்டுமே இத்துணை நீண்ட ஆய்வை மேற்கொள்ளவேண்டிய அளவிற்கு நுண்ணிய அம்சங்கள் அதில் ஆழ்ந்து பொதிந்து இருக்கின்றன.
தமிழ்ப் புதுக்கவிதை இலக்கியத்தில் ந. பிச்சமூர்த்தியின் வழித்துணையும் சி. மணியின் நரகமும் இரண்டு மைல்கல்கள் ஆவன. வழித்துணை படித்துப் புரிந்து கொள்வதற்கு சுலபமாக இருக்கிறதுதான். ஆனால் அந்த எளிமையும் சுலபத்தன்மையும் ஏமாற்றக்கூடியதென்றும், அதில் ஆழமான பொருள்களையும், நயங்களையும், துருவிப்பார்க்க நிறையவே இருக்கின்றன என்பதை இவ்வாய்வு நூலைப் படித்த பின்புதான் அறியமுடியும்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.