Description
பஞ்ச காலம் உச்சத்தை அடையும் போதெல்லாம் ஓரிரு வெள்ளைக்காரர்கள் பஞ்சத்தால் வாடிய மக்களைப் புகைப்படம் எடுக்க வருவார்கள். மிகவும் மெலிந்து நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து படத்திற்கு காட்சி கொடுக்கும்படி கேட்பார்கள். பதிலாக அரைக் கிலோவோ அல்லது கால் கிலோவோ அரிசி தருவதாகச் சொல்வார்கள். அந்த அரிசிக்காக காலையிலிருந்து அவர்கள் கூறும்படி உட்கார்ந்து உடலைக் காண்பிக்க வேண்டும். மாலையில் வெளிச்சம் குறைந்தவுடன் படம் நன்றாகப் பதிவாகாது. மீண்டும் நாளை வருவதாகவும், மொத்தமாக அரிசியை நாளை வாங்கிக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டுச் செல்வார்கள். அடுத்தநாள் அவர்கள் புகைப்படம் எடுத்த பலர் பசியால் இறந்து போயிருப்பார்கள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.