Description
குமாரசெல்வாவின் முதல் நாவல்இது. பெண்மையின் தகுதி வளமை எனக் கொண்டாடும் உலகில் அது இல்லாத இருளியின் கறுத்த அனுபவத்தை ஊடுருவுகிறது நாவல். உலகை வளமாக்க அவள் மரங்களை நட்டுப் பள்ளிக் குழந்தைகளின் பசி தீர்க்கிறாள். தன்னை மணந்து கொண்டவனுக்கு இன்னொரு பெண்மூலம் பிறந்த குழந்தையைத் தனது மகளாக வளர்த்து அவளுக்கொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு, தனக்கு இல்லாத வாழ்க்கை நோக்கி தனிமைப் பாதையில் நடப்பதாக நிறைவுறாமல் தொடர்கிறது கதை. குமரி மண்ணின் மத அரசியல், பின்னணி நிழலாகப் படரும் வகையில் வரையப்பட்ட இந்த நாவல் சித்திரம் இதுவரைக்கும் சொல்லப்படாத பல பக்கங்களை நமக்குத் திறந்து காட்டுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.