பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் எனும் மூன்று நாடுகளிலுமுள்ள மதரீதியாகத் துன்புறுத்தப்படும் இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது குடியுரிமை திருத்தச்சட்டம் 2019. ஆனால் இசுலாமியர்களைக் கவனமாகப் புறக்கணிக்கிறது. ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேடு’ (National population Register) மற்றும் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ (National Register of Citizens) எனும் இரண்டு விடயங்களையும் அது நிறுவ முயல்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.