கேள்விகளின் புத்தகம்
பாப்லோ நெருதா வின் கேள்விகளின் புத்தகம் மற்றும் தேர்ந்தெடுத்த கவிதைகள்
₹425 ₹404
- Author: பாப்லோ நெரூதா
- Translator: பிரம்மராஜன்
- Category: மொழி, மொழியியல் & எழுத்து
- Sub Category: கவிதை, கேள்வி பதில்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
Book will be shipped within 5-10 working days.
Additional Information
- Pages: 248
- Edition: 2nd (Second)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
பாப்லோ நெரூதா 1904-1973
நெஃப்தாலி ரிக்கார்டோ ரெய்யஸ் பேசோவோல்ட்டாவாக தெற்கு சிலேவில் உள்ள பர்ரால் பிரதேசத்தில் பிறந்தார். பாப்லோ நெரூதா அரசியல்பூர்வமானதும் கவித்துவமானதுமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது முதல் புத்தகம் 1923இல் வெளிவந்தது. அதற்கடுத்த வருடம் அவர் வெளியிட்ட 20 காதல்கவிதைகள் மற்றும் ஒரு துயரக்கவிதை என்ற தலைப்பிலான நூல் அவரை ஒரு கொண்டாடப்பட்ட கவிஞராய் ஆக்கியது. தனது கவிதை செயல்பாடுகளுக்காக பல விருதுகள் பெற்றார். அதில் குறிப்பிடத்தக்கது 1971இல் வழங்கப்பட்ட நோபல் பரிசு.1973ஆம் ஆண்டு சிலேயின் சாந்தியாகோ நகரில் காலமானார்.
பிரம்மராஜன்
கவிஞர், கட்டுரையாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். மீட்சி சிற்றிதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர். Muse India என்கிற இந்திய அளவிலான மின்னிதழின் தமிழ் பிரிவிற்கான எடிட்டர் மற்றும் ஆலோசகர். இவர் தனது கவிதைகளில் யாருடையதைப் போலவுமல்லாத மொழிநடையையும், பிரத்யேகமான தொனியையும் கைக்கொண்டவர். பரிசோதனை முறையில் பல குரல்களை (Polyphonic) கவிதைக்குள் சாத்தியப்படுத்தியவர். கவிதைக்குள் மௌனத்தை பேசவைத்த ரசவாதி விவசாயத்தை பின்புலமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் இயற்கையின் மீதும் சூழலியலின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் ஜாஸ் இசைகளில் ஞானம் கொண்டவர். Fussion Music பற்றிய தொடர் ஆராய்ச்சியிலும் அதை எழுத்து வடிவமாக்குவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அரசு கல்லூரிகள் பலவற்றில் கலைக் ஆங்கில பேராசிரியராகப் பணியாற்றி கல்லூரி முதல்வர் (பொ) ஆக இருந்து ஓய்வு பெற்றவர். இயல்பில் ஒரு தனிமை விரும்பி. தனது வசிப்பிடத்தை நிலையாக அல்லாமல் விருப்பத்திற்குத் தகுந்தபடி மாற்றிக் கொள்ளுகிற ஒரு நாற்பரிமாண ஆளுமை.
தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய மிதாஸ் அரசனைப் போல, தொட்டதையெல்லாம் கவிதையாக்கியவர் என்று நெரூதாவை அழைத்த மார்க்வெஸ். இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான தவிஞர்.இவர் தான் என்றார். பூனையை, தக்காளியை, ரொட்டியை, மக்காச்சோளத்தை, எனுமிச்சையை, உப்பினை, வெங்காயத்தை சுவிதைகளாக உருமாற்றியவர், கவிதையின் வரையறைகளைக் கலைத்தவர். ஒரு கவிதையை எழுதுவதற்கான முறையினை எந்தப் புத்தகத்திலிருந்தும் தான் கற்றுக் கொண்டிருக்கவில்லை என்ற நெரூதா, தனது நீண்ட பயணத்தில் அதற்கான பங்களிப்புகளை பூமியிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் பெற்றதாகச் சொன்னார். கவிதைக்கலை என்பது “அற்ப ஆயுளுடையதோ அல்லது வீறார்ந்ததோ, அதில் சமப் பங்களிப்பவையாக இருக்கும் தனிமைவாசம் மற்றும் கூட்டொருமை, உணர்ச்சிகள் மற்றும் செயல்பாடு, தன்ளிலையுடனான மனிதகுலத்தினுடனான அருகாமை, அப்புறம் இயற்கையின் இரகசிய வெளிப்படுத்தல்கள் ஆகியவற்றின் ஒரு வினை” என்று தனது நோபல் பரிசுரையில் குறிப்பிட்டார். பிரம்மராஜனின் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு நெருதா வருகிறார் கவிதைகளோடும் கேள்விகளின் புத்தகத்தோடும்: கொடுங்கோன்மையை இசுழ்ந்தவாறும், தேனீக்களை, ஈக்களை, திராட்சைகளை, செர்ரிப்பழங்களை, மக்காச்சோளக் கதிர்வயல்களை. பாப்பி மலர்களை, இலையுதிர் காலங்களை, வண்ணத்துப் பூச்சிகளை, பட்டுப்புழுக்களை, கோளகங்களை, வறியவர்களை, கடவுளை, பாலைவனங்களை, ஆறுகளை.
-இரா.சுகந்தன்
Be the first to review “கேள்விகளின் புத்தகம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.