Description
கட்டுரைத் தொகுப்பில் வரும்
ஒரு கட்டுரையின் இறுதிப் பத்திகள் இப்படி முடிகின்றன.
புத்தாயிரத்தில் தமிழ்க்கவிதைகள்
இங்கு கவிதை விமர்சகர் இடம் காலியாக இருப்பதால் சக கவியே அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளவேண்டிய சூழலும் உள்ளது. மிக ஆரோக்கியமான செயதி என்னவென்றால் இன்றைய இளம் கவிஞர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வு போற்றத்தகுந்தது. கடந்த ஆண்டில் அவர்கள் ஓர் இயக்கமாக இணைந்து ஈழ விடியலுக்காக போராடியது தமிழ்ச் சூழலில் மிகுந்த நம்பிக்கையையும் வரவேற்பையும் பெற்றது.
ஆதிக்க சாதியினரிடமிருந்த கவிதைக் கலை சமூக அரசியல் மாற்றத்தால் பிற்படுத்தப்பட்டோரிடம், சிறுபான்மையோரிடம், தலித்துக்களிடம், பெண்களிடம் வந்த நிலை இன்னும் மேன்மையடைந்து புத்தாயிரத்தில் உதிரிகளிடம் கவிதை வசப்பட்டிருக்கிறது. திருநங்கைகளிடம், வேசிகளிடம், திருடர்களிடம் இன்னும் குற்றச்செயல் புரிபவர்களிடம் கூட கவிதை நெருங்கும் காலம் கனிகிறது. புத்தாயிரத்தின் வரும் ஆண்டுகள் அதை சாத்தியமாக்கி நம் வாழ்க்கையின் இருள் பகுதிகளை வெளிக்கொண்டு வரும் அப்போது மானுடம் மேலும் ஓளி பெறக்கூடும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.