Description
“அறிவும், அறம் இல்லாத நெஞ்சமும் கொண்ட வேந்தனின் வாயில்காவலனே! சிலம்பு ஒன்றை ஏந்திய பெண் ஒருத்தி வாயிலில் நிற்கிறாள்! என்று உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாய்!” என்றாள்.
கண்ணகி உடனே அந்த அழகிய கால்சிலம்பை எடுத்து உடைத்தாள். சிலம்பிலிருந்து மாணிக்கப்பரல்கள் சிதறின. ஒரு மாணிக்கப்பரல் மன்னனின் வாயருகே தெறித்தது.
மாணிக்கப்பரலைக் கண்ட மன்னன் பதறினான். அவனது வெண்கொற்றக்குடை தாழ்ந்தது. கையிலிருந்த செங்கோல் தளர்ந்தது. பொற்கொல்லனின் சொல்கேட்டு ஆராயாமல் கொலை செய்த நான் அரசனே அல்ல. நான்தான் கள்வன் என்றுகூறி மயங்கி வீழ்ந்தான். இறந்தான்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.