காமத்துப்பா
லரசிய லறிக்கை
₹690 ₹656
- Author: ரமேஷ் பிரேதன்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: கவிதை
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
Book will be shipped within 5-10 working days.
Additional Information
Description
பிணம் எரிப்பவன்
நடுயிரவில் ஊருக்கு வெளியில் சுடுகாட்டில் ஒரு பிணத்தை எரித்துக் கொண்டிருந்தான். இருட்டிலிருந்து அவனை நோக்கி வந்தேன். என்னைக் கண்டதும், ‘என்ன இந்நேரத்தில் இந்தப் பக்கம்?’ எனக் கேட்டான்.
”தூக்கம் வரவில்லை, பிணம் எரியும் வாடையைக் காற்றில் முகர்ந்தேன். வெளியில் வந்தேன்; இருட்டில் திட்டாக வெளிச்சத்தைக் கண்டேன். நீ இருப்பாய், உன்னிடம் விடியும்வரை பேசிக்கொண்டிருக்கலாம் என வந்தேன்.”
பாதி எரிந்துவிட்டிருந்தது. மிச்ச நெருப்பைக் கிளறிப் பரப்பினான். எம்மைச் சூழ்ந்த அனலுக்கு வெளியே மார்கழிப் பனி இறங்கிக்கொண்டிருந்தது. மூங்கில் கழியால் தட்டிவுடைத்த மண்டையோடு காய்ந்தத் தேங்காய் ஓட்டைப்போல எரிந்தது.
‘பார்த்து நாளாகிறதே, ஊரில் இல்லையா?’ எனக் கேட்டுக்கொண்டே நெருங்கி வந்து என் கண்களைப் பார்த்தான். ‘விழிகளுக்குள் சிதை வெளிச்சம்’ என்று முணுமுணுத்தான்.
மீசையின் இரு முனைகளையும் மேல்நோக்கி முறுக்கிவிட்டேன். ‘மாரைப் பெரியதாக வளர்த்து வைத்திருக்கிறாய்; எப்படி?’ எனக் கேட்டுத் தொடவந்தக் கையைத் தட்டிவிட்டேன்.
‘நான் அரிச்சந்திரன், எனது கண்களுக்கு மட்டுமே தெரியும் உனக்கு நான் கட்டியத் தாலி’ எனச் சொல்லியபடி தனது இடக்கையால் எனது இடுப்பைச் சுற்றி வளைத்துத் தன்னோடு சேர்த்து அணைத்தான். வலக்கையிலிருந்த மூங்கிலால் சிதையைக் கிளறினான். அவனது கன்னத்தைக் கடித்தேன்; வியர்வை வழிந்துக் காய்ந்தத் தசை உப்புக்கரித்தது.
“திருமணம் முடிக்கவேண்டியதுதானே?” பேச்சை வளர்க்கக் கேள்வி எழுப்பினேன். வாய்விட்டுச் சிரித்தான். அவனது அணைப்பிலிருந்து விலகிய என் முகத்தில் சில நொடிகள் பார்வை நிலைத்தான்.
‘மீசைக்காரி’ எனச் சொல்லி கண் சிமிட்டினான். இடைவெளிவிட்டு அவனே தொடர்ந்தான்; ‘பிணம் எரிப்பவனுக்கு எவள் வாழ்க்கைப்படுவாள்? உன்னை ஒருமுறை கேட்டேன், நீயே மறுத்துவிட்டாய். கூடிவாழும் ஒப்பந்தத்தில் உடம்புறவைத் தாண்டி வேறெதுவுமில்லை.’
“இரண்டோராண்டுகளில் எனதிருப்பு உன்னை அலுப்படைய வைக்கும். உனக்கொரு குழந்தை வேண்டும்; உனது உயிர்த் தொடர்ச்சி; அதனால்தான் உன்னை மறுதலித்துவிட்டேன். வாழ்ந்தத் தடயத்தை விட்டுச்செல்ல வேறென்ன இருக்கிறது?”
எல்லாம் எரிந்துத் தழல் அடங்கி, கங்கு கனன்றது. சிதையைக் கையெடுத்துக் கும்பிட்டான். எட்டியிருக்கும் தகரக் கொட்டகைக்கு நகர்ந்தோம். அங்கே மெழுகிய சிமென்ட் தரையில் அமர்ந்தோம். எனது மடியில் படுத்துக்கொண்டான்.
‘மாதம் ஒருமுறையேனும் இந்தப் பக்கம் வந்துப் போ’ என்றான்.
“ஒட்டிக்கொண்டதைப் பிய்த்தெடுக்கும்போது வலிக்கும்” என்றேன்.
அமைதியாக இருந்தான். எனது மடியிலிருந்து எழுந்து தனது மடியில் என் தலையைச் சாய்த்துக்கொண்டான். “நான் இறந்ததும் என்னை நீதான் எரிக்கவேண்டும்” என்றேன்.
குனிந்து உதடுகளைக் கவ்வினான்.
Be the first to review “காமத்துப்பா” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.