Description
‘கள்ளம்’ இன்றைய கலைஞன் ஒருவனின் கள்ளம். வாழும் தந்திரம். கனவல்ல நிஜம்! தஞ்சாவூர் என்ற பழைய தலைநகரைச் சுற்றிலும் இதுபோன்ற பழைய கனவுகள் நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. இதை நம்ப இலக்கியவாதி கொஞ்சம் சஞ்சலப்படுவான் என்பது எனக்குத் தெரியும். தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை செய்கிற சாதாரண (Craft) தொழில் கலைஞனும்கூட. இடிந்து நொறுங்கும் வாழ்விலிருந்து நீந்திப் புதிய முட்டையை உடைத்துச் சிறகடித்து மேலே உயரும் மனிதர்களை, அவர்களின் கள்ளத்தை அவை இரண்டையும் ஒரே நேரத்தில் நிரூபணம் செய்கிறது இந்த நாவல். ‘தஞ்சாவூர் சித்திரப்படம்’ என்ற பெயரில் நலிந்து நாசமாகிய பழைய வரலாற்றை நான் எனது நாவலில் சொல்ல வரவில்லை. அந்த சோகத்தைப் பேசவில்லை என்ற என் நண்பனுக்கு எனது பதில் ‘கள்ளம்’ என்பதே! இத்தகைய வாழ்க்கையை இப்படிக் காண்பது என்பது இலக்கியத்தில் மட்டுமே சாத்தியம். வரலாற்றில்கூட ஏன் விஞ்ஞானத்தில்கூட சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்தப் படைப்பு சாத்தியம் ஆகும்.
– தஞ்சை ப்ரகாஷ்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.