Description
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எந்த எதிர்பார்ப்பும், ஆரவாரமும் இன்றி, நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஏழு குறுநாவல்கள், எட்டு கட்டுரை தொகுப்புகள் என்று பல களங்களிலும் பன்முகத்தன்மை மிளிர தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர் விட்டல்ராவ்.
தமிழ் இலக்கியத்துக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பை போற்றும் விதத்தில் ‘சிற்றில்’ அமைப்பின் சார்பாக சேலத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. புனைவுகள் மட்டுமன்றி சினிமா, ஓவியம், சிற்பம், வரலாறு என்று பரந்துபட்ட அவரது படைப்புகள் பற்றி விரிவாகப் பேசப்பட்டன.
அரை நூற்றாண்டு காலமாக அயராது இயங்கிவரும் ஒரு எழுத்தாளரை, அவரது மொத்தப் படைப்புகளின் ஊடாக வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது, அவரது ஆளுமை மற்றும் பங்களிப்பு குறித்த ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கிறது. அந்த சித்திரத்தை வாசகர் மனத்தில் உணரச் செய்வதாக அமைகிறது இத்தொகுப்பு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.