Description
கவிஞர் கண்ணதாசனின் திரையிசை இலக்கியத்தைத் திறனாய்ந்து ஒரு பதினைந்து படித் தேன் பிழிந்து கொடுத்திருக்கிறார் இந்நூலில் திரு. தமிழருவி மணியன் அவர்கள். வெறுமனே நாம் காதுகளில் கேட்டுக் கடந்து சென்ற வரிகளையும் அகழாய்வு செய்து அவற்றுக்குள் அமுத ஊற்று இருப்பதை அடையாளம் காட்டுகிறார். காற்றில் வரும் கண்ணதாச கீதங்களிலெல்லாம் இனி மாற்றுப்பார்வை பார்க்கவும் அவற்றின் மதிப்பை உள்ளபடி உணரவும் இந்நூல் சுகமாகக் சொல்லிக் கொடுக்கிறது. காலம் வென்ற காணங்களின் மூலம் என்னவென்றும்,முகவரி என்னவென்றும் கண்டறிந்து நம் முன் கொண்டு வந்து நிறுத்துவதுடன். அவை செய்யும் ரசவாத ஜாலம் என்னவென்றும் ரசமாக இந்நூல் எடுத்துரைக்கிறது. கண்ணதாச காதலர்களுக்கு மட்டுமல்ல, இலக்கிய கலைஞர்களுக்கெல்லாம் இனிப்பான நூல் இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.