காலந்தோறும் மஹாபாரதம்
₹750 ₹713
- Author: சரஸ்வதி சுவாமிநாதன்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: நாவல்
- Publisher: அகநாழிகை
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
‘காலந்தோறும் மஹாபாரதம்’ என்கிற இந்த நூல் மற்றவற்றில் இருந்து நிறையவே மாறுபட்டிருக்கிறது. ஒரு கதையோ, புராணமோ, வரலாறோ எழுதுபவர், தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்வதாக இல்லாமல், எல்லோர்க்கும் எல்லாமும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுத வேண்டும். அந்த விஷயத்தை மிக அழகாக, எளிமையாகக் கையாண்டிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூலில் இருக்கும் நுட்பமான, நுணுக்கமான விஷயங்கள். இவையெல்லாம் எப்படிக் கிடைத்தது? எங்கே தேடித் தேடி இவற்றைக் கண்டுபிடித்தார் என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது. படிக்கப் படிக்க பாரதம், ‘பா’ ரதமாக நம் மனக்கண்ணில் உருண்டு ஓடுகிறது. யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ உலகில் பல கோடிக் கதைகள் உருவாகியுள்ளன. புதிதாகச் சொல்வதற்கு எதுவுமே இல்லை என்றாலும், காலத்தின் நிழலாக ஒரேயொரு கதை மட்டும் பாரதத்தின் வாழ்வியலில் இருந்து பிரிக்க முடியாத அடையாளமாகத் தொடர்கிறது. மஹாபாரதம் எவ்விதம் காலத்தின் நிழலாகத் தன்னை தகவமைத்துக்கொண்டது என்பது வியப்பானது. இது ஆழ்ந்த விரிவான ஆய்வுக்குட்பட்டதாக உள்ளது. சரஸ்வதி சுவாமிநாதனின் காலந்தோறும் மஹாபாரதம் நீட்சியின் உந்துதலுக்கான சிறு கீற்றின் வெளிச்சத் தரிசனத்தை பல இடங்களில் வெளிப்படுத்துகிறது. மஞ்சுநாத், எழுத்தாளர் நிலையாமை என்பது எந்த அளவு பேசப்படுகிறதோ அதே அளவு, சாஸ்வதத் தன்மையையும் நம் மரபு பேசிக்கொண்டேதான் இருக்கிறது. இதிகாசங்களின் மொழி காலம்தோறும் சற்றே மாறும் என சொல்லப்படுவதற்கு சமீபத்தைய சான்றுதான் காலந்தோறும் மஹாபாரதம் என்ற இந்நூல். அட்டவணைகள், மேலாண்மை மேற்கோள்கள், உரிய படங்கள் என வித்தியாசமான நடையில் இந்நூல் மிளிர்கிறது. ஒரு நாவல் தன்மையுடன் கதாபாத்திர குண மாற்றங்களை, பரிணாம வளர்ச்சிகளை சுட்டிக்காட்டுகிறது.
•••
பிச்சைக்காரன், எழுத்தாளர்
Be the first to review “காலந்தோறும் மஹாபாரதம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.