பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவர், ஆசுகவி, மதுர கவி, சித்திரக் கவி, வித்தாரக் கவி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். அவரது கவித்திறன் குறித்து அவரே ‘இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்’ பாடுவேன் எனக் குறிப்பிடுவார், அவரது பாடல்களில் நகைச்சுவையும் நையாண்டியும் விரவிக் காணப்படும். அதற்கோர் உதாரணமாக, நாகபட்டினத்தில் காத்தான் சத்திரத்தில், சாப்பாடு வழங்குவதைக் குறித்து அவர் பாடியது: கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம் இலையிலிட வெள்ளி எழும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.