Description
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை
ம. காமுத்துரையின் எழுத்துச் சிறப்பு, ஆடம்பரங்களற்ற மக்கள் மொழி. வாசிக்கத் தூண்டும் ஈர்ப்புள்ள நடை. மகாராஜன் இஞ்சினியரிங் லேத் அன் வெல்டிங் ஒர்க்ஸ் எனும் சிறிய தொழில் பட்டறையின் கதாபாத்திரங்களைக் கொண்டு புனையப்பட்ட நாவல் இது. கடசல் நாவலின் கதாபாத்திரங்கள் யாவரும் எளிய மாந்தர். அவர்களுக்கானது எளிய மொழி, எத்தனை செறிவான உணர்ச்சிப் பெருக்கு என்றாலும் அவர்களது போக்கில், மொழியில் வடிக்கப்பட்டிருக்கின்றன. எளிமை என்பதன் பொருள் தாழ்ந்தது என்பதல்ல. உண்மையானதும் சிறப்பானதும் என்பதாகும்.
சிறிய தொழிற்கூடத்தின் அன்றாட நிகழ்வுகள், பணிபுரிவோரின் அல்லற்பாடுகள், அவர்தம் சினம் – சிரிப்பு – காழ்ப்பு – கருணை – அன்பு – காமம் – தேடல் – தோல்வி என சகலமும் கடசல் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
– நாஞ்சில் நாடன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.