கடல் புறா - 3 பாகங்கள்
₹1,150 ₹1,093
- Author: சாண்டில்யன்
- Category: வரலாற்று புனைகதை
- Sub Category: நாவல்
- Publisher: வானதி பதிப்பகம்
Additional Information
Description
கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.
கதைச் சுருக்கம்
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது, அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து , அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை , தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.
கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்கரகளிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான்.மஞ்சளழகி அவனிடம் காதல் வயபடுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.
பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைகரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் . ஸ்ரீவிஜயத்தை கைப்பற்றி சோழ புலிக்கொடியை பறக்கவிடுகிறான் . போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
Be the first to review “கடல் புறா – 3 பாகங்கள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.