Description
சிறு அக்கினிக் குஞ்சாக கிரெட்டா முன்னெடுத்த போராட்டம், உலகெங்கும் உள்ள சிறார் மத்தியில் பரவி பெரும் சுடராக இன்றைக்கு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டமற்ற, அதேநேரம் உறுதியான கிரெட்டாவின் குரலுடன், லட்சக்கணக்கான குரல்கள் இன்றைக்கு இணைந்துள்ளன. ஒரு சிறுமியின் எதிர்ப்புக்குரல் இன்றைக்குப் பேரோசையாக மாறியிருக்கிறது. காலநிலை மாற்ற நெருக்கடி என்ற பிரச்சினையை உலகம் இன்றைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.
“நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் பேரச்சம் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நான் நாள்தோறும் உணரும் அச்சத்தை, நீங்களும் உணர வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நம் வீடு தீப்பற்றி எரியும்போது என்ன செய்வோம்? அதையே இப்போதும் செய்ய வேண்டும். ஏனென்றால், நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.”
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.