Description
“குழந்தைகள் . . ?” என்னும் கேள்விக்கு “இல்லை” என்று சொல்லி மெல்லியதாகப் புன்னகைக்கும் பெண்கள் பலரைப் பார்த்திருப்போம். அந்தப் புன்னகைக்குப் பின்னால் இருக்கும் வலி அவர்கள் மட்டுமே உணரக்கூடியது. குழந்தைக்கான தனிப்பட்ட ஏக்கம் ஒருபுறமிருக்க, குழந்தையின்மையால் குடும்பத்திலும் சமூகத்திலும் ஆண்மை/பெண்மை மீது சுமத்தப்படும் அவமானங்கள் இந்த வலியைப் பல மடங்காகப் பெருக்கக்கூடியவை. குழந்தைப் பேற்றுக்கான சிகிச்சைகள் தரும் உடல், மன உலைச்சல்களின் சொல்லொணாத வேதனைகள் தனிக்கதை.
குழந்தையின்மை தரும் வலி குறித்துப் பொதுச் சமூகம் அதிகம் அறிந்திராத பல பரிமாணங்களை அனுபவங்களாக வாசகருக்குத் தருகிறது காயாம்பூ. மனவெளியிலும் புற உலகிலும் நந்தினி மேற்கொள்ளும் துயரார்ந்த பயணங்களின் தடங்களைச் சுமந்தபடி புனைவு வெளியில் சலனம் கொள்கிறது அது. நுண்ணுணர்வு மிகுந்த சித்திரிப்புடன், பிறர்மீது புகார்களை அடுக்காத பக்குவத்துடன் காயாம்பூவின் நிறத்தையும் மணத்தையும் அதன் இழைகளையும் சித்திரித்திருக்கிறார் லாவண்யா.
படைப்பில் வெளிப்படும் அனுபவங்களை வாழ்ந்து பெற்றதுபோன்ற உணர்வைத் தருவது வலுவான புனைவெழுத்தின் கூறுகளில் ஒன்று. ‘காயாம்பூ’ அத்தகைய ஒரு படைப்பு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.