காலங்களில் அது வசந்தம்
- Author: இளம்பரிதி கல்யாணகுமார்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: கட்டுரை, சினிமா
- Publisher: வாசகசாலை
Out of stock
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
நம்மைச் சார்ந்தவர்களின், நம்மை விட்டுப் பிரிந்தவர்களின் ஞாபகம் ஏதோவொரு பழைய பாடலில் நிச்சயம் புதைந்திருக்கும். பல ஞாபகங்கள் கொண்ட பழைய பாடல்கள் அனைத்துமே பாதுகாக்கப்பட வேண்டிய ஞாபகப் பேழை. அந்தப் பேழையில் இருந்து நூறு பாடல்களை இந்தப் புத்தகத்தில் கட்டுரைகளாகக் கொண்டு வந்திருக்கிறேன். ஒரு கால் நூற்றாண்டு கால இசைப் பெட்டகத்தில் இருந்து நூறு முத்துகளை மட்டும் தேர்ந்தெடுப்பதென்பது நட்சத்திரக் கூட்டத்தில் பிரகாசமான நூறு நட்சத்திரங்களை பிரித்தெடுக்கச் சொல்வதற்கு சமம். இதுதான் ஒளிமிகு நட்சத்திரம் என்று கணக்கு வைத்தால் அதை விட ஒளிமிகுந்து அடுத்த ஒன்று வரிசையில் வந்து நிற்கும். இறுதிவரை நூறோடு நிறுத்த இயலாத காரியம்.
இப்படியான இக்கட்டில் இயன்றவரை அதிகம் ஒலித்த பெரும்பாலான மனங்களுக்கு நெருக்கமான நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
சில கட்டுரைகளில் பாடல் பிறந்த கதை, சில கட்டுரைகளில் வரிகளின் அழகு, சில கட்டுரைகளில் கலைஞர்களின் புகழ், சில கட்டுரைகளில் வரிகள் பேசிய அரசியல் என்று கடந்த கால ஞாபகங்களை மீட்டும் முயற்சியாகவே இந்த நூலை உங்கள் கைகளில் தருகிறேன். பெரும்பாலான செய்திகள் ஏற்கெனவே படித்தோ, கேட்டோ இருக்கலாம். இருந்தாலும் உங்களுக்கு சில ஞாபகங்கள் அந்தப் பாடல்கள் மூலம் கிளர்ந்தெழுந்தால் அதுவே நான் விரும்பும் மகிழ்ச்சி.
– Elambarithi Kalyanakumar
Be the first to review “காலங்களில் அது வசந்தம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.