Description
இதுவரை சங்க இலக்கியத்தில் இலக்கியச் சுவைக்காக நாம் படித்த பாடல்கள், வெறும் கதையல்ல உண்மைதான் என்பதைக் கீழடி ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன.. டாக்டர் கைலாசம் இந்தப் புதினத்தில் பாண்டிய மன்னர் பூதப்பாண்டியர் பற்றி விரிவாக எழுதியுள்ளார். மன்னரைப் பற்றிப் புறநானுற்றில் இருக்கும் பாடல்கள் மிகையல்ல. அந்தக் காலப் பாண்டிய மன்னர்களின் வாழ்வும் வளமும் நிஜம் என்ற இன்ப அதிர்ச்சி இந்தப் புதினத்தைப் படிக்கும் பொழுது உண்டாகும்.. இசக்கியம்மனின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட இந்தக் கதையின் நாயகி இயக்கி, நாட்டுப்பற்று கொண்டவள்..பாண்டிய நாட்டுக்கு எதிராக யார் என்ன செய்தாலும், பாண்டிய நாட்டின் மன்னராக இருந்தாலும் கூட மன்னிக்கமாட்டாள் என்ற நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட விருவிருப்பான சம்பவங்களைக் கொண்ட இந்தப் புதினம், அந்தக் காலத்தில் மதுரை எப்படி இருந்திருக்கும் என்பதை இன்று கீழடியில் தொடரும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் விவரிக்கிறது
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.