Description
‘இதுவரை நான்’ எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் சம்பவங்கள் எப்படிச் சரிதமாகும? பிறகு, நான் ஏன் என் சுவடுகளைச் சேகரிக்கிறேன்? எனக்கு ஏன் என் முதுகு பார்க்கும் முயற்சி? விரக்தியின் கரைகளில் தாடி வளர்த்தவாறு, கானல் நீரில் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் என சமகால இளைஞர்களின் மனதிலெல்லாம் நம்பிக்கை நாற்றுகளை நடத்தான். தன் முதுகில் ஒரு லட்சியக் குடத்தைச் சுமந்து கொண்டு இந்த நத்தை நகர்ந்தது எப்படி என்பதைச் சோர்ந்து கிடப்பவர்களுக்குச் சொல்லத்தான். நீர் பசையில்லாத பாறைகளின் இடுக்கில் முளைத்த இந்தக் கறுப்பு விதை கிளைகளை மேலே விரிப்பதற்காகச் சூரியனோடு நடத்தி போராட்டமும், வேர்களைக் கீழே வீசுவதற்காக பூமியோடு நடத்திய போராட்டமும், வேர்களைக் கீழே வீசுவதற்காக பூமியோடு நடத்திய போராட்டமும் இளைய தமிழனுக்குள் ஒரு சுயநம்பிக்கையைச் சுரக்க வைக்க வேண்டும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.