உபநிடதங்கள் கவித்துவத்துடனும் உருவகங்களுடனும் எழுதப்பட்ட பழமையான விவேக நூல்களாகும். உபநிஷத் ஒன்றை கையில் எடுத்தவுடன் பெரும்பாலோர் அது பழைய நூல் என்று மட்டுமே நினைக்கிறார்கள். இதனால் அன்றைய கற்பித்தலுக்கும் அதன் இன்றைய நடைமுறை பொருத்தத்திற்கும் உள்ள உறவையோ அல்லது எதிர்காலத்தில் நிச்சயம் என்று அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் விஷயங்களையோ புரிந்து கொள்வதில்லை.
குரு நித்ய சைதன்ய யதி இந்நூலில் உபநிடதக் கவிஞரை, நமது சிறப்பான உள்ளுணர்வின் இன்றைய இருப்பாக நாம் அறிந்துகொள்ளவும், என்றும் அழியாத உபநிடத மந்திரங்களை நமது சுவாசம் போன்ற நெருக்கமானதாயும் நமது இதயத்தை போன்று உறுதிமிக்கதாயும் உள்ள அசைக்கமுடியாத சொல் ஆக அறியவும் நமக்கு உதவுகிறார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.