Description
அபூர்வமான கற்பனையுடன் வித்தியாசமான களங்களில் பல காலநிலைகளில் மனித வாழ்க்கையின் சிக்கல்களையும் காலம் இன்னும் சிதைக்காமல்விட்டிருக்கும் அன்பு, காதல், பயம், கண்ணீர் இவற்றையும் முற்றிலும் மாறுபட்ட மொழிநடையில் கூறும் கதைகள்.
அறிவியல், போர், பெருந்தொற்று, அதிகாரம் ஆகியவற்றால் உலகளாவிய மனிதச் சமூகம் சந்திக்க நேரும் பாதிப்புகளில் இக்கதைகள் மையம்கொள்வதால் இவை தமிழில் எழுதப்பட்ட உலகக் கதைகள் என்று அடையாளப்படுத்தலாம். விஜயராவணனின் இக்கதைகள் யாவும் அந்நிய நிலத்தில் நிகழ்பவை. இவை முன்வைக்கும் கதைக்களங்களும் அதிகமும் நமக்குப் பரிச்சயமில்லாதவை. ஆனால், தன் நேர்த்தியான சித்தரிப்பின் மூலமாக இவற்றை நமக்கு நெருக்கமான கதைகளாக அவரால் மாற்றிவிட முடிந்திருக்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.