Description
இந்தியா என்ற ஜனநாயக நாட்டை வடிவமைப்பதில் தவிர்க்க முடியாதவோர் அத்தியாயமாகவே ‘இரட்டை வாக்குரிமை’ என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்க வருடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒலித்துக்கொண்டிருந்த இந்து மதப் புனருத்தாரண கோஷம், தனக்குப் பெருந்திரளான மக்களை ஈர்க்கக்கூடிய வல்லமை இன்னமும் வந்திருக்கவில்லை என்பதைக் கண்டுகொண்டபோது, இந்தியத் தேச விடுதலையாகத் தன்னை உருமாற்றிக்கொண்டு, தேசம், தேசியம், ஜனநாயகம் போன்ற இரவல் கருத்தாக்கங்களால் நெய்யப்பட்ட சொல்லாடலை உற்பத்தி செய்யத் துவங்கிய காலகட்டத்தில் ‘காந்தி’ என்ற கற்பனைக்கும், அம்பேத்கர் என்ற யதார்த்தத்திற்கும் இடையிலான உரையாடலின் உச்சபட்சமே இரட்டை வாக்குரிமையும் அதனைத் தொடர்ந்த புனா ஒப்பந்தமும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.