இந்நூல் ஒரு சோமாலியப் பெண்ணின் வாழ்வியல் அனுபவம் மட்டுமே. கேள்வி எழுப்புவதே பாவம் எனக் கற்பிக்கப்பட்ட அந்தப் பெண் , கேள்விகள் வழியே தன் மீது கட்டப்பட்ட பிம்பங்களை உடைக்கத் தயாராகின்றார். அவர் கலகக்காரியுமல்ல. போராளியுமல்ல. அவர் ஒரு சாதாரணப் பெண். மனித உயிர்கள் சுவாசக் காற்றை சுவாசிக்க விரும்புவது போல அவரும் சுவாசிக்க விரும்பினார். அதன் முகம் தெரிய, கால்கள் தெரிய. பிற பெண்களைப் போல நடக்க விரும்பினார். பேச விரும்பினார். அவரை இறை நம்பிக்கையற்றவர் எனப் பிறர் சொன்னதை அலட்சியம் செய்தார். அவருக்கும் இறைக்கும் இடையே பிறர் நிற்பதை அவர் விரும்பவில்லை என்பது மட்டும் உண்மை.
ச. பாலமுருகன் எழுத்தாளர்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.