பெருநகரமொன்றில் திரைத்துறையிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட மனிதனாகத் தான் சந்தித்த திரை ஆளுமைகளை வாசித்த நூல்களை தான் ரசித்த இசையைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்ளும் மகேந்திரனின் இக்கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவனம் பெற்றவை.
தான் ஓர் இயன்முறை சிகிச்சையாளராக இருப்பதால் அவர் அறிந்த மருத்துவ ரீதியான உண்மைகளையும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார். உதவி இயக்குநர் ஹரியுடனான நேர்காணல், திரையுலகில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் எதிர்கொள்கின்ற வலியை நம்மிடம் கடத்துகிறது. வாசகர்களைத் தம்மோடு நெருக்கம் கொள்ளச் செய்கிற, அருகிலிருந்து நம்மோடு உரையாடுகிற நண்பனின் மொழியைக் கொண்டிருப்பது இப்பதிவுகளின் பலம்.
– ந.கவிதா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.