Description
ஒரே தாய் மொழியைப் பொது மொழியாகக் கொண்ட ஒரு தாயகத்தைக் கொண்டுள்ள ஓர் இனப் பகுதியில்தான் எந்தச் சமூக மாறுதலும் புரட்சியும் நடைபெறும். பல்வேறு இனங்களையும், பல்வேறு மொழிகளையும், பல்வேறு தாயகங்களையும் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில், அனைத்திந்திய அளவில் ஒரே வகையான மாறுதல் புரட்சியோ அல்லது நிகரமைப் புரட்சியோ ஒரே நோக்கதில். ஒரே வடிவத்தில் நடக்காது.
அதேபோல் – இந்திய ஏகாதிபத் தியத்தின் கீழ் காலனி போல் உள்ள ஒரு மாநிலத்தில் தனியே முழு சமூக மாறுதல் நடத்திட முடியாது. இந்தியாவில் ஏராளமான தனித் தனித் தாயகக் கட்சிகள் (மாநிலக் கட்சிகள்)இருப்பதைப் பார்த்தாவது இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மாநில ஆட்சிகள் அடிப்படையான சமூகமாறுதல் செய்வதற்கான அதிகாரம் அற்றவை. புதுதில்லியின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவை!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.