Description
நம் நாடு பல காலம் அந்நியர்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்தது; நீண்ட நெடியப் போராட்டங்களுக்குப் பிறகு நாம் விடுதலை பெற்றோம். நாமனைவரும் அறிந்த இந்த ஒற்றை வரியை நீட்டி, விவரித்தால் உலுக்கியெடுக்கும் வரலாறு உயிர்பெற்று வருகிறது.
போர்ச்சுகல், டச்சு, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை எப்படி ஆக்கிரமித்தன? இந்த ஆக்கிரமிப்புகள் நம் உடலையும் உள்ளத்தையும் எவ்வாறு பாதித்தன? நம் நிலமும் கடலும் பண்பாடும் பொருளாதாரமும் வாழ்வியலும் எத்தகைய பேரழிவுகளைச் சந்தித்தன? இவற்றையெல்லாம் இந்தியா எவ்வாறு எதிர்கொண்டது?
மூன்று நூற்றாண்டுகளாக இந்தியா அனுபவித்த கணக்கற்ற வதைகளையும் வலிகளையும் இந்நூல்மூலம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ராய் மாக்ஸம். வணிகத்தின் பெயரால் தொடங்கிய கப்பல் பயணம் எவ்வாறு கொலை, கொள்ளை, பட்டினி, பஞ்சம் என்று முற்றிலும் சீரழிவுப் பாதையில் சென்று முடிந்தது என்பதை அதிர வைக்கும் சான்றுகளோடு வெளிப்படுத்துகிறது இந்நூல். ராய் மாக்ஸிமின் The Theft of India நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கம் இது.
இது காலனியத்தின் கதை. நாம் மறக்கக்கூடாத கடந்த காலத்தின் கதை.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.