Description
சாதி ஒழிய இந்து மதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். இந்து சனாதன தர்மம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்டது. பௌத்தம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது ஆகவே, நான் பௌத்தத்தை தழுவுகிறேன் என்றார் அம்பேத்கர். இந்திய வரலாறு என்பது பௌத்தத்திற்கும், ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்ட சனாதன தருமத்திற்கும் நடந்த போர் என்கிறார் அம்பேத்கர்.
சாதி வேரூன்றியிருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் படுகிற துன்பத்திற்கு காரணம் அவர்கள் சாதி இந்துக்களை அண்டி பிழைக்க வேண்டிய நிலை இருப்பதால் என்று பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். சொத்து ஓரிடத்தில் குவிந்து கிடக்கச் செய்யும் சனாதன தருமத்தின் ஏற்பாடு அயோக்கியத்தனமானது என்கிறார் அம்பேத்கர். சொத்துகள் பரவலாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் வேண்டும் என்கிறார். ஆனால், இது எதையும் பேசாமல் சாதி ஒழிய வேண்டும் என்கிறது இந்துத்துவம்.
ஆனால் மதமாற்றம், பௌத்தம், பாகிஸ்தான் பிரிவினை, பொது சிவில் சட்டம், காஷ்மீர் ஆர்டிகிள் 370 என்று அனைத்திலும் இந்துத்துவர்களும் அம்பேத்கரும் ஒன்று போலவே சிந்தித்திருக்கிறார்கள் என்று வாதிக்கும் ஒரு இந்துத்துவ புத்தகம் இது. அம்பேத்கரை உள்வாங்கிச் செரிப்பதற்கான இந்துத்துவப் பிரயத்தனத்தை துலக்கமாகக் காட்டும் நூல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.