Description
வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்கள் எதற்காக? என்று தொடங்கி இந்த வாழ்வின் இறுதி இலக்கு எது என்று காட்டும் நூலாக இதைச் சொல்லலாம். அடிப்படை விஷயங்களாக இருக்கும் ஆன்மிகம் அல்லாது வேதாந்தங்கள் சுட்டிக்காட்டும் மிக உயர்ந்த நிலையை அடைந்த மகான்களைக் குறித்தே இந்த நூல் பேசுகின்றது. ஒரு ஞானியானவர் தன்னைப் போன்றே இருக்கும் வெவ்வேறு ஞானியரையும் சூட்சுமமாகச் சுட்டிக்காட்டியபடி இருப்பார்கள். அப்படி இந்த நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற மகான்களாக விளங்கிய, சுவாமி பப்பா ராமதாஸ், சுவாமி பரப்பிரம்மம் நித்யானந்தா, சாது ஓம் சுவாமிகள், திண்ணை சுவாமிகள், காவ்ய கண்ட கணபதி முனி ஆகியோர் குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார் சரஸ் சரவணன். இந்த நூற்றாண்டின் ஆன்மிக வேதாந்த விஷயங்களை வடிவமைத்தவர்களில் இவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.