Description
கௌரவன் (முதல் பாகம் – உருண்டன பகடைகள்)
நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன்’ துரியோதனன்.
பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான பீஷ்மர், தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். பார்வையற்ற திருதராஷ்டிரன், அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி
காந்தாரியுடன் அரசு பீடத்தில் அமர்ந்திருக்கிறான். இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி, தன் மூத்த மகன் தர்மனை அரியனையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.
இது ஒரு புறம் இருக்க —-
அதே அஸ்தினாபுர அரணமனைத் தாழ்வாரங்களில் பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஒர் அந்நிய நாட்டு இளவரசன். அவன் உருட்டிய பகடைகள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கின்றன
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.