இன்றி அமையாது உலகு
₹210 ₹200
- Author: சிவராமன் கணேசன்
- Category: அறிவியல், தொழில்நுட்பம் & மருத்துவம்
- Sub Category: கட்டுரை, கணிப்பொறி / இணையம்
- Publisher: ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
எலான் மஸ்க் ‘நான் பார்த்து பயங்கொள்ளும் ஒரே கார்பரேட் நிறுவனம் கூகுள் மட்டும்தான்’ என்று சொல்லியிருக்கிறார். ஜெஃப் பேசோஸ், ‘கூகுள் என்பது ஒரு மலை போன்றது, அதில் ஏற முயற்சி செய்யலாம், ஆனால் அதை நகர்த்துவது என்பதெல்லாம் குதிரைக்கொம்பு’ என்கிறார். மார்க் ஸூகர்பெர்க், கூகுள் நிறுவனத்தில்தான் உலகின் தலைசிறந்த மூளைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றையாவது என்னுடைய நிறுவனத்திற்குக் கடத்திக்கொண்டு போய்விடவேண்டும் என்று எப்போதும் நினைக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே பேட்டி கொடுக்கிறார்.
கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல. இன்று உலகின் சர்வ டிஜிடல் காரியங்களிலும் ஏறி அமர்ந்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறது கூகுள். நானின்றி அசைவதில்லை அகிலம் என்று அமைதியாகவும், பூடகமாகவும் சில நேரங்களில் பூதாகாரமாகவும் வெளிப்படுகிறது. இந்த அதி நவீன டிஜிடல் காலத்தில் கூகுளை ‘நீயின்றி அமையாது உலகு’ என்று சொல்வதில் ஆழ்ந்த பொருளுள்ளது. அது வளர்ந்து, வேர்கொண்டு இன்று செழித்து நிலைத்திருக்கும் கதையை விரிவாகச் சொல்கிறது இப்புத்தகம்.
சிவராமன் கணேசன் கணினியியலில் இளங்கலைப் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அமீரகத்தில் 15 வருடக் கணினிப் பணிக்குப் பின்னர், தற்போது இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில் நுட்ப நிறுவனமொன்றில் திட்ட மேலாளராகப் பணிபுரிகிறார். கணினி, நுட்பம், செயற்கை நுண்ணறிவு முதலானவற்றைப் பற்றித் தமிழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.
Be the first to review “இன்றி அமையாது உலகு” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.