ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அபார்ட்மென்ட் (பாகம் 1 & 2)
₹525 ₹499
- Author: ராஜேஷ்குமார்
- Category: குற்றம், த்ரில்லர் & மர்மம்
- Sub Category: நாவல்
- Publisher: பிரதிலிபி
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
நூல் அறிமுகம்
ஈச்சம்பாக்கம் ஏரியாவில் உள்ள அதிரா அபார்ட்மென்ட்டுக்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வைத்திருக்கும் இன்னொரு பெயர் ‘சந்திரமுகி அபார்ட்மென்ட்’ .
அவர்கள் அப்படி அழைப்பதற்கு காரணம் அந்த அபார்ட்மெண்டில் நடக்கும் அசாதாரணமான சம்பவங்கள்தான். அதில் சில சம்பவங்கள் அதிர்ச்சியானவை. புதிரானவவை. நம்ப முடியாதவை.
அந்த அபார்ட்மென்ட்டில் ஒரு குறிப்பிட்ட ஃப்ளாட்டில் மட்டும் வாடகைக்கு யார் வந்தாலும் சரி, அடுத்த ஆறு மாத காலத்திற்குள் கார்டியோ வேஸ்குலார் ஆக்ஸிடென்ட் CVA எனப்படும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போகிறார்கள். அவை இயற்கையான மரணங்கள் என்பதால் காவல்துறையும் அந்த மரணங்களில் அக்கறை காட்டுவதில்லை.
ஆனால்….
கருப்பு பெயிண்ட் பூசப்பட்டு கொலையுண்ட ஒரு இளம்பெண்ணின் உடல் சென்னையின் புறநகர் பகுதியில் கிடைத்த பின்பே போலீஸ் விழித்துக் கொண்டு செயல்படுகிறது அதிரா அபார்ட்மென்ட்டில் உறைந்து போயிருந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த கதை உங்கள் தைரியத்தை கொஞ்சம் அசைத்துப் பார்க்கும். யாரோ ஒருவர் உங்களையும் அறியாமல் உங்களை கண்காணிப்பது போன்று உணர்வு தோன்றும்.
இந்த மெகா நாவல், இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது. இது முதல் பாகம். இதைப் படித்தவுடனே, உங்கள் கண்களும் கைகளும் இரண்டாம் பாகத்தை தேடும் என்பதில் சந்தேகமில்லை.
நூலாசிரியர் அறிமுகம்
ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் கே.ராஜகோபால். எழுத்துக்காக ராஜேஷ்குமார் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவரின் முதல் சிறுகதை “உன்னைவிட மாட்டேன்” 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் “வாடகைக்கு ஓர் உயிர்” மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. அதே வருடம் கல்கண்டு வார இதழில் “ஏழாவது டெஸ்ட் ட்யூப்” என்ற முதல் தொடர்கதை வெளியானது.
கடந்த 53 ஆண்டுகளில், இதுவரை 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதைத்தவிர, நூற்றுக்கணக்காண அறிவியல், சமூக, ஆன்மிக மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!”, “வாவ்! ஐந்தறிவு”, “எஸ் பாஸ்”, “சித்தர்களா! பித்தர்களா!!” முக்கியமானவை. “என்னை நான் சந்தித்தேன்” என்ற தலைப்பில் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைசுவராஸ்யமான நடையில் எழுதியுள்ளார். இது மிகச் சிறந்த சுயமுன்னேற்ற நூலாகவும் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது.
இவரது சில தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்கள் பல, திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தான் எழுதிய குற்ற புதினங்களில், நவீன அறிவியலையும் பல புதுமைகளையும் புகுத்தி தனிமுத்திரை பதித்ததால், வாசகர்களும் பதிப்பாளர்களும் இவரை ‘க்ரைம் கதை மன்னர்’ என்று அழைக்கிறார்கள். இந்த 2023 வருடத்திலும் முன்னணி அச்சிதழ்களிலும் பல மின்னிதழ்களிலும் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
எழுத்துலகில் இவர் ஆற்றிய சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.
Be the first to review “ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அபார்ட்மென்ட் (பாகம் 1 & 2)” Cancel reply
You must be logged in to post a review.
You may also like
-
-
ஜன்னல் சீதைகள் – மாதங்களில் அவள் மார்கழி (இரு நாவல்களின் தொகுப்பு)
₹190₹181(5% OFF)Rated 0 out of 5( 0 reviews ) -
விவேக், இனி ஆட்டம் உன் கையில்! & விவேக்கும் 41 நிமிஷங்களும்
₹200₹190(5% OFF)Rated 0 out of 5( 0 reviews ) -
-
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.