எழுபது கதைகள்
₹740 ₹703
- Author: ஜீ முருகன்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: சிறுகதை
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
Additional Information
- Pages: 618
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடிவார கொட்டாவூர் கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்டவர்.மின்னணுவில் பட்டயதாரியான இவர், ஒரு டிவி தயாரிப்பு நிறுவனத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் கிராமத்துக்கு வந்து 5 ஆண்டுகள் விவசாயம் செய்தார். அதைத் தொடர்ந்து செங்கத்தில் கணினி அச்சகம் தொடங்கி 9 ஆண்டுகள் நடத்தினார். பின்னர் தினமணி பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்தார். இப்போது செங்கத்தில் வசித்துவரும் அவர் கணினியில் புத்தக வடிவமைப்புப் பணிகளைச் செய்துவருகிறார். இவற்றின் இணைப் பாதையில் புனைகதைகளை எழுதியதோடு, ஸ்ரீநேசனோடு இணைந்து ‘வனம்’ பத்திரிகையையும் நடத்தினார். ‘ஜீவா தமிழ்’ என்ற எழுத்துரு மென்பொருளையும் உருவாக்கியுள்ளார். லாரி பெக்கரின் கட்டடக்கலையால் ஈர்க்கப்பட்டதால், அந்த முறையில் ஒரு வீட்டைக் கட்டியதோடு, அந்தத் தொழில்நுட்ப அனுபவத்தை ‘இந்து தமிழ் திசை’யில் தொடராக எழுதி வந்தார். இப்போது அது ‘நமக்கான நம் வீடு’ என யாவரும் பதிப்பகத்தில் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
பிரபஞ்சத்தில் பிற உயிர்களின் இருப்பு மீதான முருகனின் கதைத்துவ அக்கறைதான் கிராமங்களின் இருப்புக் குறித்தான பிரக்ஞையாக அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. முருகன் கதைகள் கிராமத்துச் சூழலை யதார்த்தவாதக் கதைப் பாணியில் ஒரு புகைப்படப் பிரதியைப்போலச் சித்தரிக்கும் தன்மை கொண்டவையல்ல. அதில் தனக்கு விருப்பமோ ஈெடுபாடோ நம்பிக்கையோ இல்லை என்று முருகனும் ஒரு நேர்காணலில் சொல்கிறார். அவர் தன் கதைக் கிராமங்களை ஒரு விசேஷமான இடத்தில், நிலையில் வைக்கிறார். அதாவது அவருடைய பெரும்பாலான கதைகளில் இடம் பெறும் நகரச் சூழலின் நனவிலிக்குள்ளோ அல்லது ஞாபகங்களிலோ அல்லது உணர்விலோ கிராமங்கள் உள் பொதிந்து வைக்கப்படுகின்றன.
-பா.வெங்கடேசன்
Be the first to review “எழுபது கதைகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.