Description
கறுப்பினத்தவரின் இலக்கியக் குரலாகப் பொதுவெளியில் பெரும் அங்கீகாரம் பெற்றவர் அமெரிக்கக் கவி மாயா ஆஞ்சலு. தன்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனத்தையும் அதனால் விளைந்த அவலங்களையும் உதறி மேலெழும் உந்துதலைத் தரும் கவிதையாகவும் கறுப்புத் தோலையும் விளிம்புநிலை வாழ்க்கையையும் கொண்டாடும் பாடலாகவும் ஒரே நேரத்தில் வெளிப்பட்டது மாயா ஆஞ்சலுவின் குரல். சொந்த வாழ்க்கை, உறவு, சமூகம் என்று மூன்று வெளிகளிலும் கறுப்பர்களுக்கு நேரும் அசாதாரண அனுபவங்களை இக்கவிதைகள் விடுதலை சார்ந்த படிமங்களில் ஒரு முனையில் சித்தரிக்கின்றன; மறு முனையில் கறுப்பினப் பெண்களின் துயரங்களையும் ஆன்ம வல்லமையையும் இருத்தலின் பெருமிதத்தையும் அலங்கார நடையில் வர்ணிக்கின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.