பல விஷயங்களை எண்ணிக் குழப்பிக்கொண்டு சோர்வடைகிறீர்களா?
ஏன், எதற்கு, எப்படி, இப்படி நடந்திருந்தால், அப்படி நடந்திருந்தால், ஆனால்… என்று குழம்புகிறீர்களா?
அப்படியானால் இந்தப் புத்தகம் உங்களுக்கு!பிரபல ஆன்மிகவாதியான பிரம்மாகுமாரி ஷிவானி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களை அறிந்துகொள்ளும் பாதையில் வழிநடத்தியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தில் சகோதரி ஷிவானி, ‘ஓர் எண்ணம்’ எவ்வாறு நம் உணர்வுகள், மனப்பாங்கு, செயல்கள், பழக்கங்கள் மற்றும் நம் குணாதிசயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி நம் வாழ்க்கையையே மாற்றியமைக்கிறது எனத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
எண்ணங்களைச் சீர்படுத்த தியான வர்ணனைகள், சுய பரிசோதனைக் கேள்விகள், ஆளுமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளும் வழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்நூல்.
மனதின் அற்புதத் திறனை வெளிக்கொணர விரும்புபவருக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.