கார்த்திகாவின் கவிதைகள், கருத்தும் அனுபவமும் முயங்கும் புள்ளியைத் தேடி நகர்கிறவை. காட்சிகளும் அவற்றைப் பற்றிய சிந்தனையோட்டமும் இரண்டறப் பிணைந்திருப்பவை. நனவும் பிரமையும் உருவக மொழியில் பரிவர்த்தனை கொள்ளும் சந்தர்ப்பங்கள். ஓவியம்போன்ற துல்லியம் கொண்ட காட்சிகளை முன்னிருத்தி, உணர்வுவீச்சுகளைப் பதிவுசெய்ய முனைகிறவை.
நவீன உலகின் பொருட்களும், நபர்களும், இடங்களும், உணர்வுகளும் சரளமாக வந்துசெல்லும் கவியுலகம் இவருடையது. தட்டி ஆச்சியும் வான்காவும் காளியும் சிந்திக்கும் ஊசியும் இயல்பாக இடம்பெறும் உலகம். ரப்பா நூயியும், டென்னிஸ் வீரர்களும், சாம்பாரில் ஊறிய பூரியும் நிரம்பியிருக்கும் நூதன உலகம்.
இறுக்கமேயற்ற மொழியில், புகாரற்ற தொனியில், அன்றாடத்தின் மறைபுலத்தைத் தெளிவித்துக்கொள்ள முற்படும் கவிதைகள். துளியும் அவநம்பிக்கையோ புலம்பலோ தொனிக்காதவை. அதற்காக, செயற்கையான நம்பிக்கையை, உற்சாகத்தை ஊட்டுவதுமில்லை.
இடங்களும் காலமும் விளிம்புகளின்றிப் பரந்திருக்கும் கவிதைவெளியில், உருவகங்கள், பிரமைகள்வழி சாதாரணக் காட்சிகள் கூர்மை கொள்கின்றன. தினசரியின் அலகுகளை புனைவின் களத்தில் நிறுத்திக் கையாளும் கவிதைகள் இவை.
– யுவன் சந்திரசேகர்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.