என் சரித்திரம்
₹600 ₹570
- Author: உ.வே. சாமிநாதைய்யர்
- Category: சுயசரிதைகள், நாட்குறிப்புகள் மற்றும் உண்மை தரவுகள்
- Sub Category: சுயசரிதை
- Publisher: உ வே சாமிநாதையர் நூல்நிலையம்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: -
- Binding: Hardcover
- Language: தமிழ்
Description
சுயசரிதை, தன்னைத் தானே விவரிக்கும் வரலாறு. அது மனதுக்கு நெருக்கமான கடிதம், நாட்குறிப்பு, நினைவோடை எனப் பல்வேறு வடிவங்களை எடுக்கலாம். ’என் சரித்திரம்’ என்னும் இந்த நூலில் உ.வே. சாமிநாதையர் தம் தனிப்பட்ட வாழ்வையும் நாமெல்லாம் அவரைத் தமிழ்த் தாத்தா என அழைப்பதற்குக் காரணமானவற்றையும் விவரிக்கிறார். இதைத் தம் பிறந்த ஊரில் தொடங்கி, பட்டம் பெற்றது வரை என 122 இயல்களில் விளக்குகிறார். கூடவே, தாம் தமிழ்க்கல்வி கற்ற பின்னணியையும் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் தெளிந்த நடையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இதற்காக ஆய்வு, தேடல், வரலாறு என அவர் மேற்கொண்ட பயணங்கள், சந்திப்புகள், நிகழ்வுகள், உதவிகள், தோல்விகள், சுவடியாய்வு, பதிப்பாக்கம் போன்றவற்றை நம்மிடம் சொல்வது மூலம் தமிழின் பழம்பெரும் நூல்கள் எப்படியெல்லாம் மீட்கப்பட்டன என்கிற அனுபவத்தில் நம்மையும் பங்கேற்கச் செய்கிறார். இதன் மூலம் இயல்பில் அகநிலைப் பண்பை உடைய ஒரு சுயசரிதை, எழுதியவரின் வெறும் வாழ்க்கைக் கணக்காக மட்டுமின்றி, தமிழ்ப் பண்பாட்டுக்கு மூலாதாரமாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்வதற்கும் மீளுருவாக்கம் செய்வதற்கும் உதவுகிறது. அத்துடன் மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள அதிக வாய்ப்பையும் வழங்குகிறது. இதுவே இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. *** சரித்திரம் தொடர்பான பலவகைக் குறிப்புகளை எழுதிவைக்கும் பழக்கமுடைய உவேசா, 1855-1898 காலப் பகுதியில் நிகழ்ந்தவற்றை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். இது ’ஆனந்த விகடன்’ இதழில் 6-1-1940 முதல் தொடராக அவர் காலமாகும் வரை வெளிவந்தது. பிறகு நூலுருவம் பெற்றது.
Be the first to review “என் சரித்திரம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.