Description
யதார்த்தத்துக்கும் மீயதார்த்தத்துக்கும் இடையேயான ஒரு பெருவெளியில் புனைவின் எண்ணற்ற சாத்தியங்களை நிகழ்தகவுகளற்ற ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக நிகழ்த்திக் காட்டுகிறது இராக்கிய எழுத்தாளரான வஃபா அப்துல் ரஸ்ஸாக்கின் ‘புயல் முட்டை’.
தமிழில் சமகாலச்சூழலில் எழுதப்படும் நுண்கதைகள் – நவீனம் அல்லது தொன்மம் எதுவானாலும் – உணர்வுத்தளத்தில் எழுதப்படுகிறவையாகவே உள்ளன. வஃபாவின் இக்கதைகள் அத்தகைய மரபார்ந்த அணுகுமுறைகளை முழுமுற்றாக நிராகரிக்கின்றன. இவை பெளதீகத்தின் எவ்வித விதிகளுக்குள்ளும் அடங்க மறுக்கின்றன. நுண்கதை வடிவத்தில் இது மிகவும் மாறுபட்ட முயற்சி என்பதை நாம் உரத்துச்சொல்லலாம். புதிய சொல்முறைக்கான சில சாத்தியங்களையும் தமிழில் இந்தத் தொகுப்பு தொடங்கிவைக்கக்கூடும்.
அரபுமொழியிலிருந்து அபாரமான இந்தக் கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருக்கும் பேராசிரியர் ஜாகிர் ஹுசைனுக்கு என் மனமார்ந்த நன்றி .
– கார்த்திகைப் பாண்டியன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.