எதற்காக எழுதுகிறேன்
₹100 ₹95
- Author: சி சு செல்லப்பா
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: கட்டுரை
- Publisher: சந்தியா பதிப்பகம்
Additional Information
- Pages: 112
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
எதற்காக எழுத்தாளர்கள்?
“எழுத்தும் ஒரு பிழைப்புதான். ஷேக்ஸ்பியரே பிறந்திருக்காவிட்டால் கூட ஒன்றும் குடி மூழ்கி போயிருக்காது ” என்று ஒரு சந்தர்ப்பத்தில் எழுதினார் வண்ணநிலவன். ஆனால், வள்ளுவர் எழுத்தை எல்லாம் அந்த மாதிரி எடுத்துக்கொள்ள நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்.அதைப் போல ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்.
எதற்காக எழுதுகிறேன் ? என்ற தலைப்பில் ஒரு குறுநூல். சுமார் 100 பக்கங்கள் கொண்டது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் உள்ளிட்ட 10 பிரபல எழுத்தாளர்களிடம் அவர்கள் ஏன் எழுதுகிறார்கள் என்ற எண்ணத்தை கட்டுரையாக வாங்கி சி.சு.செல்லப்பா அவர்களால் தொகுக்கப்பட்டது. சந்தியா பதிப்பக வெளியீடு. அரை மணி நேரத்தில் படித்துவிடக்கூடிய சுவையான நூல்.
எதற்காக எழுதுகிறார்கள்? பணத்திற்காகவா? புகழுக்காகவா? ஆத்ம திருப்திக்காகவா? பரப்புரை செய்யவா? அறிவூட்டவா? மகிழூட்டவா? பொழுது பொக்குவதற்கா? அல்லது தங்களுக்குப் பொழுது போகாமலா? பாராட்டைப் பிச்சை கேட்டா? என்று தன் போக்கில் ஒவ்வொரு எழுத்தாளரும் அலசியுள்ளனர்.
நீங்கள் எழுத்தாளாராகவே, எழுதுவதில் ஆர்வம் கொண்டவராகவே,ஏன் மற்றவர்கள் எழுதுவதை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தால் கூட அவசியம் வாசிக்க வேண்டிய நூல் அது. அந்த வாசிப்பு உங்கள் எழுத்துக்கு மலர்ச்சி ஊட்டும். உங்களுக்கு வளர்ச்சி ஊட்டும்.
– சங்கர சரவணன்
(15.06.2023)
Be the first to review “எதற்காக எழுதுகிறேன்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.