Description
‘க்ளிக்’
இந்த மேஜிக் சத்தம் உலகில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. கேமெராவிலிருந்து வருவதுமட்டும் ‘க்ளிக்’ அல்ல, எல்லாமே சரியாக அதன் இடத்தில் சரியாக அமைவதுதான் ‘க்ளிக்’, அதாவது, கச்சிதமான வெற்றி.
பெரிய சாதனையாளர்களைப் பார்க்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பிரமாதமான ‘க்ளிக்’ நமக்குத் தெரிகிறது. ‘அசத்திட்டான்ய்யா’ என்று அதை நினைத்து மகிழ்கிறோம்.
ஆனால், அந்த ‘க்ளிக்’ ஒலிக்குப் பின்னால் எத்தனை ‘அடச்சே’கள் இருந்தனவோ? யாருக்குத் தெரியும்?
உண்மையில் நாம் ஏங்கவேண்டியது அந்த ‘க்ளிக்’குக்காக அல்ல, அதன் பின்னே இருக்கிற கதைக்காக. அதைப் புரிந்துகொண்டு, அவர்கள் தோல்விகளை எப்படிச் சமாளித்தார்கள், சிறிய வெற்றிகளை எப்படிக் கொண்டாடினார்கள், அங்கிருந்து பெரிய வெற்றிக்கு எப்படி முன்னேறினார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டால், நமக்கும் அதேமாதிரி சூழல் வரும்போது அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி முன்னேறலாம்.
பல சாதனையாளர்களின் வாழ்க்கையில் வந்த ‘க்ளிக்’குகளை அலசி ஆராய்ந்து வெற்றிப்பாடங்களைக் கற்றுத்தரும் நூல் இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.