ஏறக்குறைய நானூறு ஆண்டுகால சென்னையின் நதிமூலத்தை நம் கண்முன் நிறுத்துகிறது மா.சு.சம்பந்தன் எழுதியிருக்கும் `சென்னை மாநகர்’ என்னும் இந்நூல். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம் எல்லோரையுமே தகவல் பணக்காரர்களாக்கியிருக்கிறது. ஆனால், அதுபோன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் இந்நூலினை எழுதியிருக்கும் மா.சு.சம்பந்தன் எத்தனை புத்தகங்களை படித்திருப்பார், எவ்வளவு குறிப்புகளை எடுத்திருப்பார், எத்தனை இடர்களை எதிர்கொண்டிருப்பார் என்பதை இந்நூலில் இடம்பெற்றிருக்கும் மலைப்பான தகவல்கள், நம்மை எண்ண வைக்கின்றன.
தோற்றுவாய், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலம், சுற்றுப்புறத்து ஊர்கள், 15, 16ஆம் நூற்றாண்டின் சூழ்நிலை, ஆங்கிலேயர் வருகை, ஆட்சிக் காலம், நகர வளர்ச்சி, சென்னையின் சிறப்பு – என ஒன்பது தலைப்புகளில், முறையே பண்டைய சென்னையின் தொன்மையான வரலாறு துலக்கமான ஆவணமாக இந்நூலில் வெளிப்பட்டிருக்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.