Description
விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல். சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று பெண்களின் காதல்கள் தூண்டுகோலாகின்றன. பரிவும் காமமும் பகையுமான இந்தக் காதல்களின் விளைவே சட்டநாதனின் ஆளுமையாகிறது. வாழ்க்கையாகிறது. குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்தக் காதல்கள். பெண்மையின் உருக்குத்திடத்தைப் பூவாக இழைத்து, தி. ஜானகிராமன் செய்திருக்கும் படைப்பு இது. சாதாரணமான கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு பெருங்கதைஞன் சொல்ல முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்த நாவல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.