Description
வாழ்க்கையில் வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாய் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும் தன் சுயத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் ஞானி. அதன்பொருட்டு அவன் சந்திக்கிற மனப்போராட்டங்கள் இவைதான் இந்த நாவலின் மையம். தஞ்சை பக்கத்து கிராமம். மையமாக ஒரு பண்ணை – வாரிசுகள். அவர்களைச் சுற்றிலும் சுருக்கமாக மனிதர்கள். மனிதர்கள் என்றால் வாசகர்கள் எதிர்பார்ப்பிற்கிணங்க எல்லா குணத்திலும் இருக்கிறார்கள். ஒரு நல்ல நாவல் எடை கற்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல. என்ன, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அதைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கை பற்றிய படிப்பினை, மனிதர்களை வாசிக்கும் ஆற்றல் இவற்றுடன் ஆழமான சிந்தனையும் சேர்ந்தால் ஒரு நல்ல நாவலாசிரியராக வர முடியும். ஆரூர் பாஸ்கர் அப்படி வரக்கூடியவர் என்பதற்கு அவருடைய இந்த முதல் நாவல் உத்தரவாதம் அளிக்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.