Description
காஞ்சியை விட்டுப் பகைவரின் சூழ்ச்சிக்கு அஞ்சி சிறுவயதிலேயே ஓடிவந்துவிட்ட ஆனந்தமார்பன் பத்து வருடங்களுக்குப் பின்பு தந்தையைத் தேடிப் புறப்படுகிறான். அவனுடைய நண்பனும் படைவீட்டின் இளவரசனுமான இராசகம்பீரனிடம் உதவி கேட்கிறான். அவனது உதவியோடு தந்தையை எவ்வாறு மீட்டெடுத்தான். இரகசம்பீரனுக்குத் துணையாக அவன் நிகழ்த்திய போரில் அனந்தமார்பன் எவ்வாறு உதவினான் என்பதையும் விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறது இந்நாவல். படைவீட்டில் உள்ள இராசகம்பீரன் மலை மீதான கோட்டை குறித்தும் இந்நாவல் கூறுகிறது. இக்கோட்டையை எளிதில் அடையமுடியாதபடி இவர்கள் அமைத்துள்ளனர்.
இன்றும் இக்கொட்டைக்குச்க் செல்ல நெட்டுக்குத்தான மலையின் மீது ஏறித் தான் செல்ல வேண்டும். மலையின் உச்சியில் சுரங்கம் வழியாகச் சென்று தான் கோட்டையை அடைய முடியும். இந்தச் சம்புவராயர் காலத்தில் முஸ்லீம்கள் படையெடுப்பும் அவர்களால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானதையும் காணலாம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.