Description
ஐரோப்பாவின் வரலாற்றைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் நூல், நான்காம் நூற்றாண்டில் தொடங்கி, ஐரோப்பாவின் தொழிற்புரட்சி, முதல் உலகப்பேர் இரண்டாம் உலகப் போர், ஹிட்லர், முசோலினி. ஐரோப்பியப் பொருளாதாரம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் பற்றிய சித்திரம் இந்த நூலில் உள்ளது.
நம் பார்வைக்குத் தெரியும் ஐரோப்பா தகதகவென ஜொலிக்கும் ஒரு வரம்அதே சமயம் அது மட்டுமே ஐரோப்பா அல்ல. செழிப்பான மேற்கு ஐரோப்பாவின் வெற்றியை இப்புத்தகம் விவரிக்கும் அதே வேளை, இருண்ட கிழக்கு ஐரோப்பாவின் அதிர்ச்சிகரமான பக்கங்களையும் தொட்டுப் பார்க்கிறது.
அறிவியல், அரசியல், தொழில்நுட்பம், மருத்துவம், சுதந்திரம் என எல்லாப் பக்கமும் நம்மை விடப் பல வருடங்கள் முன்னே சென்று விட்ட அதே ஐரோப்பாவிலேயே, நம்மை விடவும் வறுமையில் வாடும் நாடுகள் உள்ளன, ஊழல் நிறைந்த அரசுகள் உள்ளன, குழந்தைக் கடத்தல், போதை மாஃபியா எனக் கறைபடிந்த நிழலுலகங்களும் இருக்கின்றன. என்ற பரபரப்பான உண்மைகளையும் பேசுகிறது இந்த நூல்,
இது தொடராக ‘விகடன்’ வலைத்தளத்தில் வெளிவந்தபோதே பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றது.
றின்னோா புவிசார் அரசியலிலும், உலக அரசியல் நகர்வுகளிலும் ஆர்வம் உள்ளவர், தொடர்ச்சியாகப் பல கட்டுரைகள் எழுதி வருபவர். டென்மார்க்கில் வசிக்கிறார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.